ஒக்ரோபர் 3, 2011

நம்பர் ஒன் சைகாலஜிஸ்ட்

Posted in பகுக்கப்படாதது இல் 7:44 முப by girijasubramanyam

இன்றைய விளம்பர உலகில்’ ரேட்டிங் ‘என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு வார்த்தை. டி வி நிகழ்ச்சிகளுக்கு ரேட்டிங். ஆமாம்!!!நம் கை அகஸ்மாத்தாக ரிமோட்டில் பட்டால் கூட உடனே புளூ கலரில் ஒரு நம்பர் ஸ்கிரீனில் குதிக்கிறது. நாம் நமக்கு வேண்டும் சேனலுக்கு மாற்ற விடாமல் அழிச்சாட்டியமாக சிக்னல் அனுப்பிக் கொண்டே…….. இருக்கிறது. அது பர்மிஷன் தந்தவுடன் நாம் சேனலை மாற்றி விடுகிறோம்.என்னை மாதிரி, சேனல் நம்பரை மனப்பாடம் பண்ண சோம்பேறித் தனம் பண்ணுபவர்கள் தான் மெஜாரிட்டியாக இருப்பார்கள்(ப்ளீஸ் ப்ளீஸ், ஆமாம் என்று கமெண்ட் எழுதி விடுங்கள்). அதனால் ரேட்டிங் தப்பாகாதோ? அதனால் தான் நம்பர் ஒன் ப்ரோக்ராம் என்று நூறு ப்ரோக்ராம்களை க்ளெய்ம் பண்ணுகிறார்களோ? ( ஹையா! கண்டு பிடிச்சுட்டேனே)

கதை புஸ்தகங்கள் முதல் நாளிதழ்கள்,வார இதழ்கள், சினிமா,சினிமா பாடல்கள்,டாக்டர்கள் வரை நம்பர் ஒன் ஸ்தானத்திற்கு போட்டி போடாதவர்களே கிடையாது. போட்டி போடுபவர்கள் அனைவருமே நம்பர் ஒன் தான் என்பது வேறு விஷயம். நான் இங்கு எழுதப் போவது அப்படி க்ளெய்ம் பண்ணாத ஒருவரைப் பற்றி.

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் சைகாலஜியைப் பற்றி நன்கு அறிந்தவர் ஒருவரே. அதனால் தான் ஆட் கொள்ளத் தீர்மானித்தாலும் முறை மாறுகிறது. இதோ நான் ரசித்த ஒரு தகவல்-சைகாலஜி கண்ணோட்டத்தில்.

சிவபெருமான் ,

சம்பந்தரை பாலைக் கொடுத்து ஆட்கொண்டார்.

மூன்று வயதுக் குழந்தை, அதுவும் பசியால் அழும் குழந்தை வேறு எதையும் அந்த நேரத்தில் லட்சியம் செய்திருக்காது.

அப்பரை சூலை கொடுத்து ஆட்கொண்டார்.

எழுபது வயதில், நோய்க்கு அஞ்சுவது போல் மனிதன் வேறு எதற்கும் அஞ்சுவது இல்லை.

சுந்தரரை ஓலை கொடுத்து ஆட்கொண்டார்.

கல்யாண வயதில், அதுவும் மணப் பந்தலில் இருப்பவர், அது கிடையாது என்று தெரிந்தால் எப்படி பதறுவார் என்பது தெரியும்.

மாணிக்கவாசகரை காலைக் கொடுத்து ஆட்கொண்டார்.

ஞானம் வேண்டி குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தவர், அதற்கு கொஞ்சம் குறைவானதையும் ஒப்புக் கொள்ள மாட்டார்.

 

செப்ரெம்பர் 28, 2011

சைகாலஜி என்றால் என்ன?

Posted in உளவியல், சைகாலஜி இல் 5:35 முப by girijasubramanyam

சைகாலஜி என்றால் என்ன?.

செப்ரெம்பர் 26, 2011

வணக்கம் தமிழா!

Posted in பகுக்கப்படாதது இல் 3:48 முப by girijasubramanyam

Welcome to WordPress.com. After you read this, you should delete and write your own post, with a new title above. Or hit Add New on the left (of the admin dashboard) to start a fresh post.

Here are some suggestions for your first post.

  1. You can find new ideas for what to blog about by reading the Daily Post.
  2. Add PressThis to your browser. It creates a new blog post for you about any interesting  page you read on the web.
  3. Make some changes to this page, and then hit preview on the right. You can always preview any post or edit it before you share it to the world.